Saturday, 23 September 2017

GOD LOVES A CHEERFUL GIVER

அடைக்கலா உயர்கல்வி உதவித் தொகை
(Adaikala Scholarship Award Day) - 23.09.2017

மிக நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த கட்டுரையின் மூலம் எவ்வாறெல்லாம் காலத்தின் மாற்றத்திற்கேற்ப இரக்கப் பணி ஆற்றலாம் என்பதை பகிர்ந்து கொள்ள விழைகிறேன். 

அடைக்கல அன்னையின் பிரன்சிஸ்கன் சகோதரிகளாகிய நாங்கள் எம் சபையின் 21 -வது பொதுப்பேரவை கொள்கை திட்டத்தின்படி, சாதி மத பேதமின்றி, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மற்றும் பொருளாதார குறைவின் காரணமாக உயர்கல்விக்கு செல்லாமல் இருக்கும் மாணவ மாணவிகளை கண்டறிந்து, அவர்களின் உயர்கல்விக்கு உதவும் உயர்ந்த எண்ணத்தில் அடைக்கலா உயர்கல்வி உதவித் தொகை (Adaikala Scholarship Award Day) திட்டத்தை தொடக்கி, அடைக்கல தாயின் பெயரால் 158 மாணவ மாணவிகளுக்கு கடந்த நவம்பர் 13, 2016 அன்று மாணவர் ஒருவர்க்கு Rs.20,000 /- கல்வி உதவித் தொகை வழங்கினோம். இவ்வாண்டு அதன் தொடர்ச்சியாக 23.09.2017 நேற்று, 209 ஏழை எளிய மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் அடைக்கலா உயர்கல்வி உதவித் தொகை (Adaikala Scholarship Award Day) மூலம் Rs.20,000 /- கல்வி உயர்கல்வி உதவித் தொகை பெற்றனர்.

இத்திட்டத்திற்காக எம் சகோதரிகள் தங்களின் மாத வருவாயிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கி எங்கள் தலைமையகத்திற்கு அனுப்புகின்றனர். இதற்காக நாங்கள் எங்கிருந்தும் நன்கொடை பெறவில்லை. அடைக்கலா உயர்கல்வி உதவித் தொகையில் வழங்கப்படும் பணம் முழுவதும் எம் சகோதரிகளின் சொந்த உழைப்பிலிருந்து கிடைத்த பணம் என்பதை அன்போடு பகிர்ந்து கொள்கிறேன். மேலும் இம்மாணவ மாணவிகளை தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பணித்தலங்களில் பணியாற்றும் எம் சகோதரிகள், மாணவர்களைப் பற்றிய குடும்ப தகவல்களுடன் தலைமை அன்னைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைப்பர்.

Rs.100 மதிப்புள்ள பரிசுப்பொருளுக்கு Rs.150 -க்கு உறை வாங்கி கவர் பண்ணும் இந்த விளம்பர உலகில், எந்த சிறு விளம்பரமும் இன்றி, திருவள்ளூர் அருகிலுள்ள அரண்வாயல் குப்பம் என்ற சிறிய ஊரின் ஓரத்தில் அமைந்துள்ள எங்கள் சபையின் தலைமையகத்தில் இந்த விழா நடைபெற்றது எம் தலைமுறையினருக்கு மிகுந்த எடுத்துக்காட்டாய் அமைந்தது.

கடவுளின் பணியை செய்யும் போது, எந்த விளம்பரமும் அங்கீகாரமும் தேவையில்லை. அவரே எல்லாமுமாய் இருந்து செயல்படுவார் என்பதை நான் அறிந்து கொண்டேன். இத்தகைய மாபெரும் ஈகை குணம் ததும்பிய இந்த அடைக்கல அன்னையின் சபையில் வாழ்வதை நினைத்து பெருமிதம் கொள்கின்றேன்.

நன்றி அடைக்கலத் தாயே !
என் அடைக்கல அன்னை சபையே உன்னை வணங்குகிறேன்.
இந்நிகழ்வுகளின் சென்ற வருட படத்தொகுப்பைக் காண இந்த Click this link...